கடற்படையில் இலவச பி.டெக்.,படிப்புடன் வேலை

5 months ago 16

இந்திய கடற்படையின் 10+2 (B.Tech Entry) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக்., படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Permanent Commissioned Officers (Executive & Technical Branch).

மொத்த இடங்கள்: 36.
வயது: 02.01-2006க்கும் 01.07.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 படித்து குறைந்தது 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் JEE Main 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.JEE Main Exam -2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது பற்றி விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால் ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய கடற்படையால் வழங்கப்படும் இலவச பி.டெக்., படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப் படிப்பு 4 வருட கால அளவைக் கொண்டது. பி.டெக்., படிப்பில் Applied Electronics, Mechanical, Communication, Electronics ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒரு பொறியியல் பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட படிப்புக்கான அனைத்து செலவுகளும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும். பி.டெக்., படிப்புக்கான வகுப்புகள் ஜூலை 2025ல் தொடங்கும். கேரளா, எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 வருட படிப்பு வழங்கப்படும். www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2024.

The post கடற்படையில் இலவச பி.டெக்.,படிப்புடன் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article