வருசநாடு, ஜன. 18: கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, சிறப்பாறை, மூலக்கடை, பகுதியில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளை காளவாசல் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் செங்கல் தொழில் செய்வதற்காக கரம்பைமண், செம்மண், மணல் உள்ளிட்ட பொருட்களை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக ஓடைகளிலும் பட்டா நிலங்களிலும் அள்ளி குவித்துக் கொண்டு இப்பணிகள் செயல்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள கனிம வளங்கள் திருடப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் அரசு அனுமதியின்றி சில செங்கல் சூளைகளும் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுத்து கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.