கடன் தொல்லையால் விபரீத முடிவு - விஷ மாத்திரை தின்று டாக்டர் தற்கொலை

1 month ago 13

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள முக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (57 வயது), சித்தா டாக்டர். இவர் பைங்குளம் சந்திப்பில் சித்தா மருத்துவமனை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், ஆதர்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆதர்ஷ் தற்போது பி.ஹெச். எம்.எஸ். படிப்பு முடித்து தந்தையின் மருத்துவமனையிலேயே டாக்டராக பணியாற்றி வருகிறார்.

விஜயகுமாருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததாகவும், இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் விஜயகுமார் காலையில் வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். மேலும் அவரது அருகில் ஒரு கடிதமும் இருந்தது. அதில் கடன் கொடுத்தவர்களின் பெயர் மற்றும் முகவரி குறித்து எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் விஜயகுமாரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

Read Entire Article