
கராச்சி,
இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த பதற்றமான சூழல் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது.
பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. இருந்தபோதிலும் கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர். இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.