கடந்த 2016 அதிமுக ஆட்சியில் ஐடிஐ ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

2 hours ago 1

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஐடிஐ ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒரு காலியிடத்திற்கு 5 நபர் என்ற விகிதத்தில் (1:5) நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு, பணம் கொடுத்தவர்களுக்கே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த முறைகேட்டில் அப்போதைய துறை அமைச்சர் நிலோபர் கபில் (அதிமுக) மற்றும் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்போதே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட அனைவரிடமும் புகார் கொடுக்கப்பட்டது ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேற்கண்ட முறைகேடுகளில் ஈடுபட்டஅரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பணம் கொடுத்து பணி நியமனம் பெற்று, இன்று வரை பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் உட்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கடந்த 2016 அதிமுக ஆட்சியில் ஐடிஐ ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article