கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது..!!

21 hours ago 2

சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.ஜே நகர் போலீசார் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கோகைன், கஞ்சா மாத்திரைகள் என பல்வேறு பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து தீவிரமாக ஜே.ஜே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போதை பொருள் ரெடிட் என்ற அஃப் மூலமாக இவர்கள் வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இதில் முக்கிய நபரான கார்த்திகேயன் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு இவர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மன்சூர் அலிகானின் மகன் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேரை ஜே.ஜே நகர் தனிப்படை போலீசார் நேற்று பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒரு நாட்கள் முழுவதுமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவர் வங்கியுள்ளாரா அல்லது பயன்படுத்தி உள்ளாரா என்பது தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உள்பட அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் பயன்படுத்தி இருப்பதும், வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து 4 பேரையும் ஜே.ஜே நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்சூர் அலிகானின் மகன் கடந்த 2019 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் இயக்கிய படத்தில் இவர் நடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் யார் யாரிடம் போதை பொருள் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article