சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி-2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதில் 45 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், நவம்பர் 7ம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என்றும் தங்கலான் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ம் தேதி வரை வெளியிட மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் appeared first on Dinakaran.