வருசநாடு, அக். 18: தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்து பேசினார். முகாமில் க.மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர்கள் முருகேஸ்வரி, மாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.எஸ்.மாடசாமி, மயிலாடும்பாறை ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சகாளை, ஸ்கைலாப்ராணி துரைசிங்கம், கருப்பையா, சிலம்பரசன், க.மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜய்முருகன், பரசுராமன், அன்பழகன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், மூல வைகை ஆற்றங்கரையோரமாக உள்ள கிராம பொதுமக்களுக்கு இயற்கை பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.