ஓவியம், சிற்பக் கலையில் சாதித்த 6 பேருக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது அறிவிப்பு

3 months ago 25

சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கலை, பண்பாட்டுத்துறை இன்று (அக்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின், ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழகத்தைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கு அவர்கள் நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகள், சேவைகளை பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதும், தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

Read Entire Article