'ஓலா' ஷோரூமுக்கு ரூ.2 லட்சம் அபராதம்..

2 months ago 20
நாகையில், பழுதான மின்சார ஸ்கூட்டரை முறையாக சரி செய்து தராமல் வாடிக்கையாளரை அலைக்கழித்ததாக தொடரப்பட்ட வழக்கில், OLA ஷோரூம் 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரபாவதி என்பவர், காடம்பாடியில் உள்ள OLA ஷோரூமிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். வாங்கியது முதலே ஸ்கூட்டர் அடிக்கடி பழுதானதால், பழுது நீக்கம் செய்துதருமாறு அதே ஷோரூமில் ஸ்கூட்டரை கொடுத்துள்ளார். பழுதையும் நீக்கமால், ஸ்கூட்டரையும் திருப்பி ஒப்படைக்காமல் தன்னை அலைக்கழித்ததாக பிரபாவதி தொடர்ந்த வழக்கில், அவருக்கு அந்த ஷோரூம் 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
Read Entire Article