ஓய்வூதியர் சங்க கலந்தாய்வு கூட்டம்

2 months ago 10

கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரியில், தர்மபுரி மண்டல அளவில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் போராட்ட ஆயத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 107 மாதமாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஏப்ரல் 2023 முதல் அக்டோபர் 2024 வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணம் பிடித்தம் இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் டிசம்பர் 17ம் தேதி, 30 ஆயிரம் பேர் பங்குபெறும் அரை நிர்வாண போராட்டத்தை சென்னையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மாநில பொருளாளர் பேச்சியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மண்டல தலைவர் கேசவ செட்டி, செயலாளர் கணேசன், பொருளாளர் சுகஸ்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஓய்வூதியர் சங்க கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article