ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்துக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க நீதிபதி மறுப்பு

4 months ago 15

சென்னை: ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுனில்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

Read Entire Article