ஓமலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் ₹2 லட்சம் பொருட்கள் திருட்டு

5 months ago 14

ஓமலூர், நவ.26: ஓமலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரிக்குள் புகுந்து, பணிமனை பூட்டை உடைத்து ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி கிராமம் செட்டியார் கடை பகுதியில், தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 22ம் தேதி இயந்திரவியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றும் மதன்குமார் என்பவர், வழக்கம்போல் கல்லூரியை பூட்டிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை கல்லூரிக்கு சென்றபோது, பணிமனை திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பல்வேறு இயந்திர பொருட்கள், மின்சாதன பொருட்கள் மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் கல்லூரியின் துணை முதல்வர் அருண்குமார் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓமலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் ₹2 லட்சம் பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article