ஓட்டப்பிடாரம்,ஜன.5: ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்குளம் யூனியன் துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்குளத்தில் செயல்படும் யூனியன் துவக்கப் பள்ளியில் குழந்தைகள் மனிதநேய உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ₹35 லட்சம் மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட இரு வகுப்பறைகளை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பிடிஓ சசிகுமார், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன், டிஆர்ஓ துரைசாமி, விஏஓ நெல்லையப்பன், தலைமை ஆசிரியர் முருகரத்தினம், பஞ். தலைவர்கள் பெருமாள், அருண்குமார், ஒன்றிய திமுக பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஓட்டப்பிடாரம் அருகே யூனியன் பள்ளியில் கூடுதல் வகுப்பறை appeared first on Dinakaran.