லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சிரோலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மோஹித் சவுத்ரி, தனது பள்ளியில் வரும் 7-ந்தேதி நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளுக்காக தயாராகி வந்துள்ளான். இந்நிலையில், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன், திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் மோஹித் சவுத்ரியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், அலிகார் மாவட்டத்தில் கடந்த மாதம் மம்தா என்ற 20 வயது இளம்பெண் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.