
விழுப்புரம்,
மதுரையில் இருந்து சென்னைக்கு இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரயிலில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் பி3 பெட்டியில் பயணம் செய்தார். இந்த நிலையில் அந்த ரெயில் அதிகாலை 2.30 மணியளவில் விழுப்புரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பெண். நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த சமயத்தில் அதே பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் குடிபோதையில் அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். உடனே அப்பெண், கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டு அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அந்த நபரை மடக்கியப் பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் இதுபற்றி விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே அந்த ரெயில் விழுப்பரம் ரெயில்நிலையதிற்கு வந்ததும் அந்த நபரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், திருச்சி துவாக்குடி பகுதியை சேர்ந்த அருள்பாண்டி வெயது (24) என்பதும் இவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ததும் ரெயில் பயணத்தில்போது அவர் மதுபானம் அருந்தியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருள்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.