ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

3 months ago 18

சேலம், அக்.15: சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் லதா(45). இவர் நேற்றுமுன்தினம் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நெருக்கியிருந்த பெண் ஒருவர், லதாவின் மணிப்பர்சில் இருந்து 500 ரூபாயை எடுத்தார். இதனை பார்த்த பயணிகள் அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அப்பெண் திருவண்ணாமலை மண்ணடித்தெருவை சேர்ந்த மாரியம்மாள்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகாமி, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article