
பரீதாபாத்,
அரியானாவில் 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய சகோதரனை பள்ளியில் விடுவதற்காக சென்றார். சகோதரனை பள்ளியில் விட்டு, விட்டு அவருடைய பள்ளிக்கு மாணவி புறப்பட்டு உள்ளார். அப்போது ஓரத்தில் நின்றிருந்த கார் ஒன்றில் இருந்த நபர் ஒருவர் கதவை திறந்து அந்த மாணவியை காருக்குள் இழுத்து போட்டுள்ளார்.
அந்த காரை ஒருவர் ஓட்டியுள்ளார். மற்றொரு நபர் அந்த சிறுமியை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன்பின்னர் அந்த மாணவியை கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியும் உள்ளார். பள்ளி முடியும் நேரத்தில், அந்த சிறுமியை அவருடைய கிராமத்தின் அருகே, காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு, விட்டு அவர்கள் தப்பி விட்டனர்.
இதன்பின்னர், அந்த மாணவி மெதுவாக வீட்டுக்கு சென்று நடந்த கொடூரங்களை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதுபற்றி புதிய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.