
சென்னை,
அரசியல்வாதியும், நடிகருமானவர் பவன் கல்யாண் . தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' படத்தில் நடித்து வருகிறார்.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார். வெகு நாட்களாக இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தநிலையில், சமீபத்திய நேர்காணலில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி அப்டேட் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கும் பவன் கல்யாணுக்கும் இடையேயான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. எனது தனிப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் எனக்கும் அவருக்குமிடையேயான காட்சிகள் படமாக்கப்படும். அதற்காக காத்திருக்கிறேன்" என்றார்.