
சென்னை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சந்தானம். இவர் தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்துள்ளார். கீதிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடிகை கீதிகா திவாரி, 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று விஜய் டயலாக்கை கூறி தனது பேச்சை துவங்கினார். இதனால் அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் உற்சாகத்துடன் சத்தம் எழுப்பினர். தொடர்ந்து அவர் பேசுகையில்,
'என் நெஞ்சில் குடியிருக்கும் எல்லோருக்கும் வணக்கம். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். இவர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தில் நிறைய காமெடி, எமோஷன் இருக்கின்றன. கண்டிப்பாக திரையரங்குக்கு சென்று படத்தை பாருங்கள். ரொம்ப நன்றி' என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.