மும்பை,
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா' மற்றும் 'கேல் கேல் மெய்ன்' திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
இந்நிலையில், அக்சய் குமார், டாப்சி நடித்த 'கேல் கேல் மெய்ன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சய் குமார், டாப்ஸி , பர்தீன் கான், வாணி கபூர், அம்மி விர்க், ஆதித்யா சீல் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.