ஓ.டி.டி.யில் வெளியானது 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன்

1 week ago 1

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்து இதுவாகும். இத்திரைப்படம் ரூ.2000 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. அதாவது கூடுதலாக 23 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 35 நிமிடம் கொண்ட படமாக வெளியாகி உள்ளது.

Load? Fully loaded. Pushpa 2? Reloaded Watch Pushpa 2- Reloaded version with 23 extra minutes on Netflix, out now in Telugu, Hindi, Tamil, Malayalam! Kannada coming soon.#Pushpa2OnNetflix pic.twitter.com/7eC5jqkk98

— Netflix India (@NetflixIndia) January 30, 2025
Read Entire Article