ஓ.டி.டி.யில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படம்

6 months ago 22

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படம் கடந்த மாதம் 22-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ் மற்றும் கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரின் முக்கிய நட்சத்திரங்களின் மூன்று வெவ்வேறு கதைகளை பிணைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஒவ்வொருவரும் அந்தந்த கதைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

'மகளிர் மட்டும், வி ஒன் மர்டர் கேஸ்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்து பின் 'குயின்' படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இப்படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். சத்யராஜ் 'பாபா' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது 'ஜீப்ரா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 20-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

 

Read Entire Article