ஒவ்வொரு காஷ்மீர் குடிமகனின் எதிர்காலத்திற்கான தொடக்கம்: காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

3 months ago 16

சென்னை: காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உமர் அப்துல்லா 2-வது முறையாக ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். காஷ்மீர் தேர்தல் வெற்றி ஜனநாயகத்துக்கும் இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி. ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ஒன்றிய பாஜக அரசு பறித்து அநீதி இழைத்துவிட்டது. மாநில அந்தஸ்து, காஷ்மீர் கண்ணியத்தை திரும்பப் பெற மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. ஒவ்வொரு காஷ்மீர் குடிமகனின் எதிர்காலத்திற்கான தொடக்கம்

The post ஒவ்வொரு காஷ்மீர் குடிமகனின் எதிர்காலத்திற்கான தொடக்கம்: காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article