கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு 7 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும், அரசு அலுவலகங்களை போல் தனியார் அலுவலகங்களிலும் திருக்குறளை எழுதுவது ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
The post ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.