ஒரே நேரத்தில் 3 வானிலை நிகழ்வுகள், நகராமல் இருக்கும் தாழ்வுப்பகுதி, சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள் : அதிகனமழை கன்ஃபார்ம்!!

3 months ago 16

சென்னை :சென்னை மற்றும் புறநகரில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மூன்று வானிலை நிகழ்வுகளால் கனமழை வெளுத்தி வாங்கி வருகிறது.

1. வங்கக்கடலின் தெற்கு பகுதியில் மையம் கொண்ட சுழற்சி இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 500 கிமீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. நகராமல் அதே இடத்தில் இந்த காற்றழுத்தம் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடதமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

2. அது போலவே அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்த மண்டலம் ஓமான் நாட்டை நோக்கி நகர்கிறது.

இந்த 2 வானியல் நிகழ்வுகள் மூலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

ஆனால் சென்னையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்வதற்கான காரணம் 3வது சுழற்சி ஆகும். சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்துள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தான் சென்னையில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான காரணம் ஆகும்.

இந்த 3 சுழற்சிகளும் ஒரே நேரத்தில் நிலவுவதால் 18ம் தேதி வரைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

The post ஒரே நேரத்தில் 3 வானிலை நிகழ்வுகள், நகராமல் இருக்கும் தாழ்வுப்பகுதி, சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள் : அதிகனமழை கன்ஃபார்ம்!! appeared first on Dinakaran.

Read Entire Article