ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதி வரை எதிப்போம்: திமுக சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

3 hours ago 2

சென்னை: இந்திய அரசியலமைப்பை, கூட்டாட்சிக் கருத்தியலை காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சட்டத் துறையின் 3-வது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆங்கில கலந்துரையாடலில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோர் பங்கேற்றனர்.

Read Entire Article