சென்னை,
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. ஆறு, ஏரி, குளம் மூன்றும் ஒன்றல்ல. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியன வெவ்வேறு நோக்கங்கள் கொண்டவை. இது தேவையற்ற தகராறு, காரணம் இது சிலரின் மூளையில் ஏற்பட்ட கோளாறு."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.