ஒருநாள் கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

2 hours ago 1

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 124 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்காளதேச அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடக்கிறது.

Read Entire Article