
மவுண்ட் மவுங்கானுய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து பாகிஸ்தானை ஒயிட் வாஷ் ஆக்கியது.
இதன் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரேஸ்வெல் 59 ரன்களும், ரைஸ் மாரியூ 58 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஆகிப் ஜாவேத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் 50 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பென் சியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை பென் சியர்ஸ் படைத்துள்ளார்.