ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?

5 hours ago 2

மும்பை,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதனால் இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா, தற்போது ரோகித் தலைமையில் மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இதுவரை விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணிக்கு தோனியை கேப்டனாக நியமித்துள்ளார்.

கவாஸ்கர் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

சச்சின், ரோகித் சர்மா, விராட் கோலி, மொகிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கபில் தேவ், ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி மற்றும் ஜாகீர் கான்.

Read Entire Article