
மும்பை,
5 அணிகள் இடையிலான 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றுதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை நடைபெற உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதும். தோல்வியடையும் அணி 3-வது இடத்தை பிடிக்கும். இந்த 2 ஆட்டங்களும் மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளன.
புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்த பெங்களூரு, உ.பி.வாரியர்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.