ஒயிலாட்ட பயிற்சி துவக்கம்

3 months ago 21

சிவகங்கை, அக்.10: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஒயிலாட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் 100 அரசு கல்லூரிகளில் அழியும் நிலையில் உள்ள மரபு சார்ந்த கலைகளை மாணவ,மாணவிகளுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளது. அதனடிப்படையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் துரையரசன் பயிற்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் அழகுச்சாமி, கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினர். பயிற்றுநர் வயலூர் குமரன் ஒயிலாட்டத்தின் சிறப்புகள், ஆடும் முறை குறித்து பேசினார். முதுகலை தமிழ் இரண்டாமாண்டு மாணவி அழகி மீனாள் நன்றி கூறினார்.

The post ஒயிலாட்ட பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article