ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்க திட்டம்

3 weeks ago 4

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி | உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பா.ஜ.க. கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 38 பேரை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் நிர்வாகிகளை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என்று தகவலும் கிடைத்துள்ளது. சென்னை வந்துள்ள அமித் ஷா பகல் 12 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article