மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில், ‘பட்ஜெட் பொய்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றியவர்கள், இப்போது பொம்மைகள் தயாரிப்பிலும் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவோம் என அறிவித்துள்ளனர். நூறுநாள் வேலைத் திட்டத்தில் அதே ரூ. 86 ஆயிரம் கோடி தான். ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை. ஒதுக்கீடு 9 மாதங்களில் காலியானாலும், கூலி பாக்கிக்காக மாநிலங்கள் எத்தனை முறை கதவுகளை தட்டினாலும் பலனில்லை. 30 நாள் வேலைத்திட்டம் என பெயர் மாற்றாத பெருந்தன்மைக்கு நன்றி.
லாபங்களை அனுபவிக்கும் கார்ப்பரேட்கள் வருமான உயர்வையோ, வேலை வாய்ப்பு உயர்வையோ உருவாக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் எந்த உயர்வையும் கார்ப்பரேட் வரிகளில் செய்யவில்லை. ஆய்வறிக்கை காதைக் கிள்ளினாலும் அசராமல் அள்ளிக்கொடுக்கிறது ஒன்றிய அரசு. நிதி ஆணைய நெறிகளின்படி, மாநிலங்களுக்கு தரவேண்டிய பகிர்வு தொகையில் 2024-25ல் ஒன்றிய அரசு செய்திருக்கிற வஞ்சனை 27 லட்சம் கோடி. பட்ஜெட் தொகைக்கும், உண்மை பகிர்வுக்கும் இடையே பள்ளம் அல்ல… பாதாளம் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
The post ஒன்றிய அரசின் பட்ஜெட் பள்ளம் அல்ல… பாதாளம்: மதுரை எம்பி கருத்து appeared first on Dinakaran.