ஒன்றிய அரசின் துறைகளில் 457 இன்ஜினியர்கள்

3 hours ago 3

தேர்வு: UPSC- Engineering Service Exam 2025. மொத்த காலியிடங்கள்: 457.

வயது: 01.01.2025 தேதியின்படி 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயர்லெஸ் கம்யூனிகேசன் எலக்ட்ரானிக்ஸ்/ரேடியோ பிசிக்ஸ்/ ரேடியோ இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பாடங்களில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.யுபிஎஸ்சியால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு (Preliminary Examination) மற்றும் Main Engineering Service Exam மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல் நிலை தேர்வு (Preliminary Exam) 09.02.2025 தேதியின்படி சென்னை, மதுரையில் நடைபெறும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் Indian Railway Service, Indian Railway Stores Service, Central Engineering Service, Indian Ordnance Factories Service, Central Engineering Service (Roads), Survey of India Group ‘A’ Service, Border Road Engineering Service, India Defence Service, AEE (QS & C) in MES Surveyor Cadre Service, Central Electrical & Mechanical Engineering Service, Defence Aeronautical Quality Assurance Service, AEE in GSI/Engineering Service Gr ‘A’, Indian Naval Armament Service, Asst.Naval Store Officer Grade-I Service, Indian Radio Regulatory Service Gr.A, Indian Telecommunication Service Grade A, Junior Telecom Officer Gr.B Service ஆகிய துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹200 மட்டும். இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2024.

The post ஒன்றிய அரசின் துறைகளில் 457 இன்ஜினியர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article