மதுரை: ‘வரி செலுத்துவதற்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை’ என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், ‘‘நிதிப்பகிர்வில் தங்களுக்குரிய நிதியை மாநிலங்கள் கேட்பது அடிப்படை உரிமையே. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்துள்ளது ஒன்றிய அரசு.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் ‘அற்ப சிந்தனை’ என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசின் இந்த அற்பச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசின்‘அற்பச் செயல்’: மதுரை எம்.பி காட்டம் appeared first on Dinakaran.