பெங்களூரு: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது கர்நாடகா லோக் ஆயுக்தா ஏடிஜிபி சந்திரசேகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, கர்நாடகா மாநிலம் கங்கா நகரில் 3.11 ஏக்கர் நிலம் முறைகேடாக பெற்றுள்ளார் என லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை லோக் ஆயுக்தா ஏஜிடிபி சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், லோக் ஆயுக்தா ஏடிஜிபி சந்திரசேகர் பல கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருவதாகவும், பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில், பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் லோக் ஆயுக்தா ஏடிஜிபி சந்திரசேகர் ஒன்றிய அமைச்சர் குமாரசாமிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக பொய் புகார் கூறி என்னை மிரட்டினார் என ஏடிஜிபி சந்திரசேகர் அதில் தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தா ஏடிஜிபி சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமிகூறுகையில்,’ லோக் ஆயுக்தா ஏடிஜிபி சந்திரசேகர் என் மீது புகார் அளித்துள்ளார். விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது வழக்கறிஞர் உதவியுடன் அதை எதிர்கொள்வேன்’ என்றார்.
The post ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது கர்நாடக ஏடிஜிபி போலீசில் புகார்: ரூ.50 கோடி கேட்டு மிரட்டி விவகாரம் appeared first on Dinakaran.