ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

4 weeks ago 7

 

பெரம்பலூர், டிச. 20: டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாகபேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திமுகவி னர் கருப்பு சட்டையும் கருப்பு பேட்ஜும் அணிந்து, பெரம்பலூர் பாலக்கரை அருகேயுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் புது பஸ்டாண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி துரைசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அழகு.நீலமேகம், கரிகாலன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,

சன்.சம்பத், மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச்செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், ஜெகதீஷ்வரன், வேப்பந்தட்டை ஒன்றியகுழு தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் ரெங்கராஜ், பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஹரிபாஸ்கர், கவிஞர் முத்தரசன், பாரி(எ) அப்துல் பாரூக்,குமார், தங்க.கமல், ராசா, மணிவாசகம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article