ஒன்றரை மாத பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை: தந்தை, 4 பெண் புரோக்கர்கள் கைது

2 months ago 13

ஈரோடு: ஒன்றரை மாத பெண் குழந்தையை நாகர்கோவில் தம்பதிக்கு ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை மற்றும் 4 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதிக்கு வந்து வசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகியதால், நித்யா கர்ப்பம் அடைந்தார். அவரிடம், ‘‘நமக்கு குழந்தை பிறந்தால் அதை விற்றுவிடலாம்’’ என சந்தோஷ்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் நித்யாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சந்தோஷ்குமார் குழந்தையை விற்பதற்காக, ஈரோட்டை சேர்ந்த குழந்தை விற்பனை பெண் புரோக்கர்களை அணுகினார்.  அவர்களும், நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.4 லட்சத்துக்கு சில நாட்களுக்கு முன்பு விற்றுள்ளனர். பிறந்து 50 நாட்களேயான குழந்தையை விற்றதையடுத்து நித்யாவுக்கு குழந்தையின் நினைவு வாட்டியது.

இதனால் குழந்தையை விற்பனை செய்தது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அக்குழுவினர் ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், குழந்தையை விற்பனை செய்த சந்தோஷ்குமார் (28), புரோக்கர்களான ஈரோடு செல்வி (47), பவானி சித்திக்கா பானு (44), பெரிய சேமூர் ராதா (39), ராசாங்காடு ரேவதி (35) ஆகிய 5 பேர் மீதும் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர். பணம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஒன்றரை மாத பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை: தந்தை, 4 பெண் புரோக்கர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article