ஒத்திகை பார்க்காமல் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டேன் - கமல்

3 hours ago 1

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

'தக் லைப்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது..

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கமல்ஹாசனிடம், "இதுவரை 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போதும் ஒத்திகை பார்த்துவிட்டுதான் நடிக்கப் போவீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், "ரிகர்சல் பார்க்காமல் எந்தப் படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நடிப்பு பயிற்சியில்தான் இருப்பேன். கேமராவுக்கு முன்பான நடிப்பைவிட இதுவே எனக்கு பிடிக்கும். ஒத்திகை கண்டிப்பாகத் தேவை. நான் ஒத்திகை செய்யாமலே நடித்துவிடுவேன் என யாராவது சொன்னால், அது தற்பெருமைகூட அல்ல; சில்லறைத்தனம்" எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article