''ஒத்திகை பார்க்க பிடிக்காது''...நடிகை சிட்னி ஸ்வீனி

4 hours ago 1

சென்னை,

படப்பிடிப்புக்கு முன் காட்சிகளை ஒத்திகை பார்க்க பிடிக்காது என்று ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி கூறி இருக்கிறார். நடிகை சிட்னி ஸ்வீனியிடம், சமீபத்திய ஒரு நேர்காணலில், கதாபாத்திரத்திற்கு ஒத்திகை பார்பீர்களா என்று கேட்டதற்கு, தயாராக இருப்பதை விட காட்சியில் நடிக்கும்போது உணர்ச்சியை உணர விரும்புவதாகக் கூறினார்.

அவர் கூறுகையில், ''ஏற்கனவே திட்டமிட்டு ஒத்திகை பார்த்து காட்சிகளில் நடிப்பது பிடிக்காது. அந்த தருணத்தில் உணர்ச்சியை உணரதான் மிகவும் பிடிக்கும்'' என்றார்.

சிட்னி ஸ்வீனி கடைசியாக ''எக்கோ வேலி'' படத்தில் நடித்திருந்தார். மைக்கேல் பியர்ஸ் இயக்கிய இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 6 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 13 அன்று ஆப்பிள் டிவி+ ல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

இப்படத்தில், ஜூலியான் மூர், டோம்ஹால் க்ளீசன், கைல் மெக்லாக்லன் மற்றும் ஃபியோனா ஷா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 

Read Entire Article