
சென்னை,
''லால் சலாம்'' நடிகை அனந்திகா சனில்குமார் நடித்திருக்கும் தெலுங்கு மொழி திரைப்படமான ''8 வசந்தலு'' படம் வருகிற 11-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை பனீந்திர நரசெட்டி எழுதி இயக்கி இருந்தார். அனந்திகா சனில்குமார் நடித்த சுத்தி அயோத்தி கதாபாத்திரத்தின் 19 வயது முதல் 27 வயது வரையிலான எட்டு ஆண்டுகால வாழ்க்கையின் பயணத்தை இப்படம் காட்டுகிறது.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.