ஒட்டன்சத்திரம், ஜன. 12: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ரெட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. கடந்த பெஞ்சல் புயலின் போது பெய்த பலத்த மழைக்கு இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குநர் அனீஸ் சேகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் திலகவதி, பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார், வேணாண்மை துறை இணை இயக்குநர் பாண்டியன், துணை இயக்குநர் காளிமுத்து, உதவி இயக்குநர் சந்திரமாலா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ஒட்டன்சத்திரம் ரெட்டியபட்டியில் பெஞ்சல் புயல் மழையில் பாதித்த பயிர்கள் ஆய்வு appeared first on Dinakaran.