ஒட்டன்சத்திரம் மஞ்சநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

1 week ago 3

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 27: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள், இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, தமிழக அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரமாக எடுத்து செல்வது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பரணி கே.மணி, ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் மஞ்சநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article