ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் மனுக்கள் பெறும் முகாம்

2 months ago 10

ஒட்டன்சத்திரம், நவ. 22: ஒட்டன்சத்திரத்திரம் நகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. கலால் உதவி ஆணையாளர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். இம்முகாமில் வீட்டுமனை பட்டா,ரேசன் கார்டு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இதில் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, நகர்மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் ஸ்வேதா, பொறியாளர் சுப்ரமணியபிரபு, வருவாய் ஆய்வாளர் திலகவதி, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி,  நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜயபால்ராஜ், மேலாளர் ரவி, கணக்கர் சரவணன், உதவியாளர் அருள்முருகன், கிராம நிர்வாக அலுவலர் பாபு, கிராம உதவியாளர்கள் பைசல் முகமது, விஜயபாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் மனுக்கள் பெறும் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article