ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

1 month ago 8

ஒட்டன்சத்திரம், டிச. 7: ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார்.

இம்முகாமில் புதிய அடையாள அட்டை வழங்குதல், நலவாரியம் பதிவு, பஸ் பாஸ், ரயில் பாஸ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் வீரமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முனித்துரை, மகாலட்சுமி, சிறப்பு ஆசிரியைகள் செல்லாயி, சரளா, கவிதா, இயன்முறை மருத்துவர் திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article