ஓட்டன்சத்திரம், ஜன. 12: ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகேயுள்ள அண்ணா நகரில் காவல் துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் போலீசார் குற்றச சம்பவங்களை தடுக்க மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருப்பது குறித்தும், பெண் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர்ப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்ஐக்கள் சவடமுத்து, உமா மகேஸ்வரி, சிறப்பு எஸ்ஐக்கள் காளிமுத்து, தங்கராஜ், செல்லமுத்து, சுந்தர்ராஜன், பாண்டி மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.