ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்நிலையில் வழக்கம்போல் ஆட்டுசந்தை இன்று கூடியது. ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காலை 6 மணி முதலே சந்தையில் கூட்டம் களை கட்டியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை விற்பனை செய்தனர். வழக்கமாக சந்தைக்கு வெள்ளாடுகள் மட்டும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
ஆனால், இன்று செம்மறி ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதனால், ஒரு ஆட்டின் விலை கிடு கிடுவென உயர்ந்து ரூ15 ஆயிரத்துக்கும், ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ35 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்கப்பட்டது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஆட்டுச்சந்தை நன்றாக நடந்து வருகிறது. கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் ஆடுகளின் வரத்து அதிகரித்து உள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தாலும் கூட வியாபாரிகள் ஆர்வமுடன் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் போலவே இன்று ஒரே நாளில் சுமார் ரூ16 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.
The post ஒடுகத்தூரில் இன்று நடத்த வாரச்சந்தையில் ஆடுகளின் விலை கிடு கிடு உயர்வு: ரூ16 லட்சத்திற்கு வர்த்தகம் appeared first on Dinakaran.