புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் மங்கலகிரி மாவட்டத்தில் உள்ள சித்திரகொண்டா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்திராமா, பபிதா மற்றும் சுனிதா ஆகிய 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்திராமா 2018-ல் மாவோயிஸ்டு அமைப்பில் சேர்ந்துள்ளார். அவரது தலைக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல் கமலா மற்றும் சுனிதா ஆகிய இரு பெண்களும் 2021-ம் ஆண்டு மாவோயிஸ்டு அமைப்பில் சேர்ந்துள்ளனர். அவர்கள் இருவரின் தலைக்கும் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் 3 பேரும் மங்கலகிரி மாவட்டத்தில் உள்ள தகடபதார் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த 3 பெண் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை டி.ஐ.ஜி. நிதி சேகர் தெரிவித்துள்ளார். இவர்கள் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.